• May 17 2024

வீதியில் படுத்திருந்த மாட்டினால் நேர்ந்த துயரம்..! யாழிருந்து பயணித்த கன்ரர் ரக வாகனம் தடம்புரண்டு விபத்து samugammedia

Chithra / Nov 19th 2023, 8:50 am
image

Advertisement


யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம் பாரிய விபத்தை சந்தித்துள்ளது.

ஓமந்தை வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்து கன்ரர் வாகனத்தை பின்னால் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.

இதனால் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.


வீதியில் படுத்திருந்த மாட்டினால் நேர்ந்த துயரம். யாழிருந்து பயணித்த கன்ரர் ரக வாகனம் தடம்புரண்டு விபத்து samugammedia யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம் பாரிய விபத்தை சந்தித்துள்ளது.ஓமந்தை வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்து கன்ரர் வாகனத்தை பின்னால் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.இதனால் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement