• Sep 17 2024

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!

Tamil nila / Apr 5th 2024, 6:50 pm
image

Advertisement

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வார்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர், வௌ்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார் என காலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி தங்கியிருந்த கட்டிலுக்கு அண்மையில், சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு சிறுமியின் தந்தை என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

வன்புணர்வு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய், நித்திரையில் இருந்துள்ளார்.  இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமியை வன்புணர்ந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமி, தன்னுடைய தாயின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். அதன்பின்னர் வைத்தியசாலையின் அதிகாரிகளால் வைத்தியசாலை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் காலி பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.  39 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம். காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வார்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது.வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர், வௌ்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார் என காலி பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி தங்கியிருந்த கட்டிலுக்கு அண்மையில், சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு சிறுமியின் தந்தை என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.வன்புணர்வு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய், நித்திரையில் இருந்துள்ளார்.  இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமியை வன்புணர்ந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமி, தன்னுடைய தாயின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். அதன்பின்னர் வைத்தியசாலையின் அதிகாரிகளால் வைத்தியசாலை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.அத்துடன் காலி பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.  39 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement