• May 21 2024

அரச கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் தமிழர்களின் பிரச்சனைகளை தட்டிக்கழிக்கும்.!

Sharmi / Feb 6th 2023, 11:09 am
image

Advertisement

கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட போது தமிழரசு கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும் அதற்கு முதலாவது சாட்சியாக சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.

இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தற்போது போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிபலிக்கின்ற கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி மாத்திரம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த இனத்தினுடைய பிரச்சனைகள் எவ்வளவு தூரம் பின்தள்ளப்படும் என்பதை தாம் தற்போது கண்கூடாக பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் தனது சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்றும் தனக்கு தலைமைப் பதவி தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பிரிந்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டமைப்பில் தலைமை பதவி என்பது இல்லை என்றும் இதில் அனைவரும் கூட்டுத் தலைமையாகவே செயற்படவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் விக்கினேஸ்வரன் இதிலிருந்து வெளியேறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து விட்டது என்;றும் அதற்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றார்கள் என்ற திருப்தியில் பலர் உள்ளதாகவும் அரசாங்க கட்சியிலுள்ளவர்களும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அரச கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் தமிழர்களின் பிரச்சனைகளை தட்டிக்கழிக்கும். கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட போது தமிழரசு கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும் அதற்கு முதலாவது சாட்சியாக சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.தமிழ் இனத்தின் விடுதலைக்காக தற்போது போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிபலிக்கின்ற கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி மாத்திரம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த இனத்தினுடைய பிரச்சனைகள் எவ்வளவு தூரம் பின்தள்ளப்படும் என்பதை தாம் தற்போது கண்கூடாக பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் தனது சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்றும் தனக்கு தலைமைப் பதவி தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பிரிந்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய கூட்டமைப்பில் தலைமை பதவி என்பது இல்லை என்றும் இதில் அனைவரும் கூட்டுத் தலைமையாகவே செயற்படவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் விக்கினேஸ்வரன் இதிலிருந்து வெளியேறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து விட்டது என்;றும் அதற்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றார்கள் என்ற திருப்தியில் பலர் உள்ளதாகவும் அரசாங்க கட்சியிலுள்ளவர்களும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement