• Oct 16 2024

சூரிய மின்கல யானை வேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்..!

Sharmi / Oct 15th 2024, 8:52 pm
image

Advertisement

காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம்(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பூநகரி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் குறித்த பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த திட்டமிடமானது வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது. 

கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த நிகழ்வில்  காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சூரிய மின்கல யானை வேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம். காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம்(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பூநகரி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் குறித்த பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த திட்டமிடமானது வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது. கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில்  காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement