• May 09 2024

நிச்சயம் செய்த பெண்ணை கனடா அனுப்பிய இளைஞன்: கனடா சென்றதும் கழட்டிவிட்ட தில்லாலங்கடி பெண்!SamugamMedia

Sharmi / Mar 7th 2023, 10:39 am
image

Advertisement

இளம்பெண் ஒருவரை நிச்சயம்  செய்த நபர் ஒருவர், பல இலட்சம் ரூபாய்  செலவு செய்து அவரை கனடா அனுப்பி வைத்த நிலையில், குறித்த  பெண் அவரை ஏமாற்றி விட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இச் சம்பவம் இந்தியாவின் பஞ்சாப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பஞ்சாபிலுள்ள Lapran என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் என்ற ஆணுக்கும் , லூதியானாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கௌர் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்க்காக  இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம்  செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஹர்ப்ரீத் கௌரை முதலில் கனடா அனுப்புவதாகவும், பின்னர் அவர் கணவனுக்கு விசா ஏற்பாடு செய்தவுடன்  ஹர்ப்ரீத் சிங்கை கனடாவுக்கு அழைத்துக்கொள்வதென்றும்  முடிவு செய்துள்ளனர்.

ஆனால், கௌர் கனடா சென்றதும், நிச்சயதார்த்தம் செய்த சிங்குடன் பேசுவதை துண்டித்ததுடன், கனடாவில் கௌர் வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் மற்றும் அவரை கனடாவுக்கு அனுப்ப 10 இலட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் சிங்  பொலிசில் புகாரளித்துள்ளார்.

புகாரளித்தும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  சிங்   மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி ஒன்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டுள்ளார்.

இதனால்  பொலிசார்  தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் கீழே இறங்கி   வந்துள்ளார்.


நிச்சயம் செய்த பெண்ணை கனடா அனுப்பிய இளைஞன்: கனடா சென்றதும் கழட்டிவிட்ட தில்லாலங்கடி பெண்SamugamMedia இளம்பெண் ஒருவரை நிச்சயம்  செய்த நபர் ஒருவர், பல இலட்சம் ரூபாய்  செலவு செய்து அவரை கனடா அனுப்பி வைத்த நிலையில், குறித்த  பெண் அவரை ஏமாற்றி விட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இச் சம்பவம் இந்தியாவின் பஞ்சாப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பஞ்சாபிலுள்ள Lapran என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் என்ற ஆணுக்கும் , லூதியானாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கௌர் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்க்காக  இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம்  செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து ஹர்ப்ரீத் கௌரை முதலில் கனடா அனுப்புவதாகவும், பின்னர் அவர் கணவனுக்கு விசா ஏற்பாடு செய்தவுடன்  ஹர்ப்ரீத் சிங்கை கனடாவுக்கு அழைத்துக்கொள்வதென்றும்  முடிவு செய்துள்ளனர்.ஆனால், கௌர் கனடா சென்றதும், நிச்சயதார்த்தம் செய்த சிங்குடன் பேசுவதை துண்டித்ததுடன், கனடாவில் கௌர் வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் மற்றும் அவரை கனடாவுக்கு அனுப்ப 10 இலட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் சிங்  பொலிசில் புகாரளித்துள்ளார்.புகாரளித்தும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  சிங்   மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி ஒன்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டுள்ளார். இதனால்  பொலிசார்  தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் கீழே இறங்கி   வந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement