• Apr 20 2025

புதுக்குடியிருப்பில் திருட்டுச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது..!

Sharmi / Jan 4th 2025, 11:15 am
image

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டிருந்தது. 

குறித்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும்  72 வயதான தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம்(04)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதுக்குடியிருப்பில் திருட்டுச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது. திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டிருந்தது. குறித்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும்  72 வயதான தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம்(04)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement