காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதியில் சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவித்தார்.
1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார்.
மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில், வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.
குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.
இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது.
மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு - ஆதாரங்களுடன் அறிக்கை அனுப்ப தீர்மானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதியில் சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவித்தார். 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார்.மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில், வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது.