• Nov 17 2024

22 ஆவது திருத்தும் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - ரணில் தெரிவிப்பு!

Tamil nila / Jul 20th 2024, 11:46 am
image

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, பெலிகஹவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சொக்சி உயிருடன் இல்லை, எனவே இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அப்போது அவர் தவறிழைத்தமையினால் தற்போதைய பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆவது திருத்தும் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - ரணில் தெரிவிப்பு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.காலி, பெலிகஹவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சொக்சி உயிருடன் இல்லை, எனவே இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தவறிழைத்தமையினால் தற்போதைய பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement