• May 19 2024

ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை! – கடற்றொழில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 11th 2023, 11:48 am
image

Advertisement

 


ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சிறிது நாளாக இந்திய இழுவை படகுகள் இங்கு வரவில்லை, அதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் இந்தியாவுக்கு படையில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சருடனும், பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கதைத்து, இந்த பிரச்சினை இலங்கை கடற்படையின்னுடைய பிரச்சனை அல்ல இலங்கையில் வடக்கில் வாழுகின்ற தமிழ் கடற்றொழிலாளர்கள் பிரச்சனை, ஏனென்றால் அங்கு என்ன பிரச்சாரம் என்றால் கடற்படையினர் வந்து அட்டகாசம் பண்ணுகிறார்கள் என்று அப்படியல்ல, எங்களுடைய கடலுக்குள் வந்து அவர்கள் சட்டவிரோதமான தொழிலை செய்து, எங்களுடைய வாழ்வாதாரத்தை அபகரித்து எங்களுடைய வளங்களை அழிக்கும் போது தான் இந்த பிரச்சனை வருகிறது.

இவர்கள் போகின்றது என்ற பிரச்சினை வந்தவுடன் அவர்கள் வருவது குறைந்துள்ளது, அதேபோன்று இன்னொன்றையும் சொல்லி இருக்கின்றேன் வடக்கில் இருக்கின்ற 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களும் சேர்ந்து போய் சொல்ல வேண்டும் இது கடற்படையின் பிரச்சனை அல்ல இது இலங்கையில் வட மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் கடற்தொழிலாளர்களுடைய பிரச்சனை.

மக்களும் அதை உணர வேண்டும் வடமராட்சி, பருத்தித்துறை, தென்மராட்சி பகுதிகளில் எல்லாம் உண்டியல் கொடுக்கப்படுகிறது 15 பேர் உங்களுடைய பிரதிநிதிகளாக அங்கு செல்வதற்கு ஒரு முயற்சி இடம்பெறுகிறது.

தந்தி டிவியில் பிரதமர் சொன்னதாக எனக்கு சொல்லப்படுகின்றது, கடற்றொழில் அமைச்சருடைய முடிவு தான் இறுதியான முடிவு என்று, ஒரு செக்கன் கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை இதுதான் அரசாங்கத்தினுடைய முடிவு என தெரிவித்துள்ளார்.

ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை – கடற்றொழில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia  ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது சிறிது நாளாக இந்திய இழுவை படகுகள் இங்கு வரவில்லை, அதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் இந்தியாவுக்கு படையில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சருடனும், பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கதைத்து, இந்த பிரச்சினை இலங்கை கடற்படையின்னுடைய பிரச்சனை அல்ல இலங்கையில் வடக்கில் வாழுகின்ற தமிழ் கடற்றொழிலாளர்கள் பிரச்சனை, ஏனென்றால் அங்கு என்ன பிரச்சாரம் என்றால் கடற்படையினர் வந்து அட்டகாசம் பண்ணுகிறார்கள் என்று அப்படியல்ல, எங்களுடைய கடலுக்குள் வந்து அவர்கள் சட்டவிரோதமான தொழிலை செய்து, எங்களுடைய வாழ்வாதாரத்தை அபகரித்து எங்களுடைய வளங்களை அழிக்கும் போது தான் இந்த பிரச்சனை வருகிறது.இவர்கள் போகின்றது என்ற பிரச்சினை வந்தவுடன் அவர்கள் வருவது குறைந்துள்ளது, அதேபோன்று இன்னொன்றையும் சொல்லி இருக்கின்றேன் வடக்கில் இருக்கின்ற 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களும் சேர்ந்து போய் சொல்ல வேண்டும் இது கடற்படையின் பிரச்சனை அல்ல இது இலங்கையில் வட மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் கடற்தொழிலாளர்களுடைய பிரச்சனை.மக்களும் அதை உணர வேண்டும் வடமராட்சி, பருத்தித்துறை, தென்மராட்சி பகுதிகளில் எல்லாம் உண்டியல் கொடுக்கப்படுகிறது 15 பேர் உங்களுடைய பிரதிநிதிகளாக அங்கு செல்வதற்கு ஒரு முயற்சி இடம்பெறுகிறது.தந்தி டிவியில் பிரதமர் சொன்னதாக எனக்கு சொல்லப்படுகின்றது, கடற்றொழில் அமைச்சருடைய முடிவு தான் இறுதியான முடிவு என்று, ஒரு செக்கன் கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை இதுதான் அரசாங்கத்தினுடைய முடிவு என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement