• Sep 17 2024

சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை - ஜெ.தீபா!

Tamil nila / Dec 17th 2022, 6:45 pm
image

Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆறுமுக சாமி ஆணையத்திடம் சசிகலா பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார். இதில் ஜெ.தீபா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி குறித்து பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்நிலையில், சசிகலா வழங்கிய தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து தீபா குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியாமல் தான் உள்ளது.



இதேபோல் எத்தனையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளன.  எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும்  சசிகலாவே காரணமாகும். அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்த தவறும் செய்யவில்லை என்றால் அத்தையை பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்தமைக்கான காரணம் என்ன? 



அவர்களின் ஆதாயத்திற்காக அத்தையை தவறாக பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். தமிழக அரசு சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை - ஜெ.தீபா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆறுமுக சாமி ஆணையத்திடம் சசிகலா பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார். இதில் ஜெ.தீபா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி குறித்து பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சசிகலா வழங்கிய தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து தீபா குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியாமல் தான் உள்ளது.இதேபோல் எத்தனையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளன.  எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும்  சசிகலாவே காரணமாகும். அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்த தவறும் செய்யவில்லை என்றால் அத்தையை பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன் கேமராக்களை அணைத்து வைத்தமைக்கான காரணம் என்ன அவர்களின் ஆதாயத்திற்காக அத்தையை தவறாக பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். தமிழக அரசு சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement