சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கமைய ஆடும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது. அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுகிறது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதவிக்கு வந்தவுடன் இலங்கை வங்குரோத்து நிலையடைந்து விட்டது என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமைச்சரவையோ, பாராளுமன்றமோ அறியவில்லை.
இலங்கையை போலவே பாக்கிஸ்தானும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்காக பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது வங்குரோத்து நிலையை அறிவிக்குமாறு நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் பிரயோகித்தது.
நந்தலால் வீரசிங்க போன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு ஆதரவானவர்கள் பாக்கிஸ்தானில் இல்லாத காரணத்தால் பாக்கிஸ்தான் வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை.
வங்குரோத்து என்று அறிவித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆட வேண்டும் என்பதை பாக்கிஸ்தான் நன்கு அறிந்திருந்தது. என்றார்.
IMFன் தாளத்துக்கமைய ஆடும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது - விமல் வீரவன்ச கடும் விசனம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கமைய ஆடும் இலங்கைக்கு விமோசனம் கிடையாது. அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுகிறது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதவிக்கு வந்தவுடன் இலங்கை வங்குரோத்து நிலையடைந்து விட்டது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அமைச்சரவையோ, பாராளுமன்றமோ அறியவில்லை.இலங்கையை போலவே பாக்கிஸ்தானும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்காக பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது வங்குரோத்து நிலையை அறிவிக்குமாறு நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் பிரயோகித்தது.நந்தலால் வீரசிங்க போன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு ஆதரவானவர்கள் பாக்கிஸ்தானில் இல்லாத காரணத்தால் பாக்கிஸ்தான் வங்குரோத்து நிலையை அறிவிக்கவில்லை.வங்குரோத்து என்று அறிவித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆட வேண்டும் என்பதை பாக்கிஸ்தான் நன்கு அறிந்திருந்தது. என்றார்.