திருகோணமலை -கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக குளத்தின் வான் கதவுகள் எட்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் கந்தளாய் குளத்தின் கீழ் உள்ள நீரேந்து பிரதேசங்கள் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.
அவ்வாறு நீரில் மூழ்யுள்ள பிரதேசங்களில் ஒன்றான கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள நான்கு கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளன.
மயிலப்பன்சேனை,சோலைவெட்டுவான், தகர வெட்டுவான் முதலான கிராமங்களுக்கான தரைவழி போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளன.
மக்கள்தமது போக்குவரத்தினை தோணிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கிராம மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீரில் மூழ்கிய திருமலை வீதிகள்.கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு. மக்கள் அவதி.samugammedia திருகோணமலை -கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக குளத்தின் வான் கதவுகள் எட்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.இதனால் கந்தளாய் குளத்தின் கீழ் உள்ள நீரேந்து பிரதேசங்கள் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.அவ்வாறு நீரில் மூழ்யுள்ள பிரதேசங்களில் ஒன்றான கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள நான்கு கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளன.மயிலப்பன்சேனை,சோலைவெட்டுவான், தகர வெட்டுவான் முதலான கிராமங்களுக்கான தரைவழி போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளன.மக்கள் தமது போக்குவரத்தினை தோணிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் கிராம மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.