• May 10 2024

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை! கிரிவலம்!

crownson / Dec 7th 2022, 2:32 pm
image

Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது நேற்று சரியாக 6:00 மணிக்கு பஞ்சலோகத்தால் ஆன 5 3/4 அடி உயரமும் 300 கிலோ எடையும் கூடிய மகா தீப கொப்பரையில் 4500 லிட்டர் நெய் நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக பயன்படுத்தி பர்வத ராஜகுல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.

மகாதீபத்தைக் காண பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததால் அவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இரவு முழுக்க விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 8:35 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி ஆனது நாளை 9 : 33 மணி வரை உள்ளதால் இன்றும் இரண்டாவது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் இருந்து பக்தர்கள் அவரவர்கள் ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் காத்திருந்த நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு செல்ல இருந்த சிறப்பு ரயில் வந்தவுடன் ஆன்மீக பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறி சென்றனர்.

ஆனால் அங்கு சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ரயில்வே போலீசார் முறையாக ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இரண்டாவது நாளாக இன்று கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது நேற்று சரியாக 6:00 மணிக்கு பஞ்சலோகத்தால் ஆன 5 3/4 அடி உயரமும் 300 கிலோ எடையும் கூடிய மகா தீப கொப்பரையில் 4500 லிட்டர் நெய் நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக பயன்படுத்தி பர்வத ராஜகுல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.மகாதீபத்தைக் காண பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததால் அவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.இரவு முழுக்க விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை 8:35 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி ஆனது நாளை 9 : 33 மணி வரை உள்ளதால் இன்றும் இரண்டாவது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இன்று திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் இருந்து பக்தர்கள் அவரவர்கள் ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் காத்திருந்த நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு செல்ல இருந்த சிறப்பு ரயில் வந்தவுடன் ஆன்மீக பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறி சென்றனர். ஆனால் அங்கு சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ரயில்வே போலீசார் முறையாக ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.இரண்டாவது நாளாக இன்று கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement