• May 19 2024

அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றம்?

Chithra / Dec 7th 2022, 2:31 pm
image

Advertisement


அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு மாற்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இன்னும் சில இராஜாங்க அமைச்சர்களும் விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தினத்தில் அரசாங்கத்துடன் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் சிறு கட்சிகளின் பல தலைவர்களுக்கும் எதிர்காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றம் அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு மாற்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இன்னும் சில இராஜாங்க அமைச்சர்களும் விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தினத்தில் அரசாங்கத்துடன் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் சிறு கட்சிகளின் பல தலைவர்களுக்கும் எதிர்காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement