• May 22 2024

இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல - இது ரணிலின் ஆட்சி – ஜனாதிபதி காட்டம்..! samugammedia

Tamil nila / Aug 20th 2023, 9:08 am
image

Advertisement

 "இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். அந்தச் சூழ்ச்சிகளை - சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மக்களுக்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன்; ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன். எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன். நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன்." - என்றார்.

இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல - இது ரணிலின் ஆட்சி – ஜனாதிபதி காட்டம். samugammedia  "இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். அந்தச் சூழ்ச்சிகளை - சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"மக்களுக்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன்; ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன். எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன். நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement