• May 04 2024

இதுதான் ஆரம்பம்..! புடினுக்கு எதிரான கைது வாரண்ட் - ஜெலன்ஸ்கியின் அதிரடிக் கருத்து SamugamMedia

Chithra / Mar 18th 2023, 9:28 am
image

Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. 

நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.


இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், 

வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

இதுதான் ஆரம்பம். புடினுக்கு எதிரான கைது வாரண்ட் - ஜெலன்ஸ்கியின் அதிரடிக் கருத்து SamugamMedia உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement