இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தன்சல்களின் எண்ணிக்கை 8,581 என்று அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.
குறித்த தன்சல்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாக பூரணை தினத்திலும் மறுதினமும் அவை சோதனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு விசாக பூரணை காலப்பகுதியில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்ததால், இந்த ஆண்டு தன்சல்களை சுகாதார முறையில் நடத்துமாறு சுகாதாரத் துறையை சார்ந்தவர்களால் கோரப்பட்டுள்ளது.
அத்தோடு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதார பாதுகாப்பு குறித்து பொது மக்கள் கவனம் செலுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தொற்றுநோயியல் பிரிவு வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன இதனைக் குறிப்பிட்டார்.
தானசாலைகளில் உணவு வழங்கும் நபர்களின் கைகளில் காயங்கள் ஏதேனும் இருப்பின் அவர்கள் உணவு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உணவு பரிமாறும் போது உரிய சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் தொற்றுநோயியல் பிரிவு வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு - பொது மக்களுக்கு வந்த அறிவுறுத்தல் இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தன்சல்களின் எண்ணிக்கை 8,581 என்று அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார். குறித்த தன்சல்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாக பூரணை தினத்திலும் மறுதினமும் அவை சோதனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கடந்த ஆண்டு விசாக பூரணை காலப்பகுதியில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்ததால், இந்த ஆண்டு தன்சல்களை சுகாதார முறையில் நடத்துமாறு சுகாதாரத் துறையை சார்ந்தவர்களால் கோரப்பட்டுள்ளது.அத்தோடு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதார பாதுகாப்பு குறித்து பொது மக்கள் கவனம் செலுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தொற்றுநோயியல் பிரிவு வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன இதனைக் குறிப்பிட்டார். தானசாலைகளில் உணவு வழங்கும் நபர்களின் கைகளில் காயங்கள் ஏதேனும் இருப்பின் அவர்கள் உணவு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உணவு பரிமாறும் போது உரிய சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் தொற்றுநோயியல் பிரிவு வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்துள்ளார்.