• Sep 17 2024

தமிழர்களின் நலன்களை அடகுவைத்தவர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்! - க.சுகாஸ் தெரிவிப்பு

Chithra / Feb 4th 2023, 4:44 pm
image

Advertisement

சிங்கள தேசத்திடமும் சர்வதேச சக்திகளிடமும் தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்த தரப்புக்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கறுப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இன்றைய மக்கள் திரட்சியின் வெளிப்பாடுகள் சர்வதேசத்திற்கு பல செய்திகளை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதாவது இலங்கையிலுள்ள சிங்கள தலைவர்கள் தெரிவிக்கின்ற விடயங்கள் வேறு, தமிழ் தேசித்தின் அபிலாசைகள் வேறு, என்பது இன்று தெட்டத்தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சிக்கு ஒட்டப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்பதற்கோ அல்லது தீர்வினுடைய ஆரம்பப்புள்ளியாக கூட கருதுவதற்கு தயாரில்லை என்பதை இன்றைய எழுச்சி காட்டிநிற்பதாக க.சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.


தமிழர்களின் நலன்களை அடகுவைத்தவர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் - க.சுகாஸ் தெரிவிப்பு சிங்கள தேசத்திடமும் சர்வதேச சக்திகளிடமும் தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்த தரப்புக்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கறுப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இன்றைய மக்கள் திரட்சியின் வெளிப்பாடுகள் சர்வதேசத்திற்கு பல செய்திகளை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அதாவது இலங்கையிலுள்ள சிங்கள தலைவர்கள் தெரிவிக்கின்ற விடயங்கள் வேறு, தமிழ் தேசித்தின் அபிலாசைகள் வேறு, என்பது இன்று தெட்டத்தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ் தேசம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சிக்கு ஒட்டப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்பதற்கோ அல்லது தீர்வினுடைய ஆரம்பப்புள்ளியாக கூட கருதுவதற்கு தயாரில்லை என்பதை இன்றைய எழுச்சி காட்டிநிற்பதாக க.சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement