• Sep 21 2024

குரங்குகளை விற்பவர்கள் பாம்புகளையும் யானைகளையும் விற்பர்! இது என்ன இலக்கு? samugammedia

Chithra / Apr 17th 2023, 8:00 am
image

Advertisement

நாட்டை நெருக்கடிக்களுக்குள் தள்ளிய ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும், திட்டமும் இன்றி தற்போது விடயங்களை முன்னெடுக்கின்றனர்.  குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் பாம்புகளையும், யானைகளையும் விற்பனை செய்யும் என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டு தற்போது கடனை கழிப்பதாக கூறி கொண்டு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.  

இதேவேளை முறிகளிலிருந்து 15 வீதத்தினை  பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எனவே நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் ரணில்-ராஜபக்ஸக்கள் முன்னெடுக்கும் அழிவை  நிறுத்துவதற்காக நாட்டின் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்போம்.

தற்போது நாட்டின் சுற்றுச்சூழலையும் இந்த அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. குரங்குடன் நிறுத்தமாட்டார்கள். 

யானைகளையும் விற்பனை செய்வார்கள். நாட்டை இந்த நிலமைக்கு கொண்டு சென்று ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும் திட்டமும் இல்லாமல் விடயங்களையே முன்னெடுக்கின்றனர். இதனை இவர்கள் நிறுத்த வேண்டும்.

குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. பின்னர் பாம்புகளை விற்பனை செய்வார்கள். யானைகளையும் விற்பனை செய்வார்கள். இதுவே இவர்களின் திட்டம். இது என்ன இலக்கு? என்றார்.


குரங்குகளை விற்பவர்கள் பாம்புகளையும் யானைகளையும் விற்பர் இது என்ன இலக்கு samugammedia நாட்டை நெருக்கடிக்களுக்குள் தள்ளிய ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும், திட்டமும் இன்றி தற்போது விடயங்களை முன்னெடுக்கின்றனர்.  குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் பாம்புகளையும், யானைகளையும் விற்பனை செய்யும் என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.திருகோணமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,நாட்டை பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டு தற்போது கடனை கழிப்பதாக கூறி கொண்டு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.  இதேவேளை முறிகளிலிருந்து 15 வீதத்தினை  பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் ரணில்-ராஜபக்ஸக்கள் முன்னெடுக்கும் அழிவை  நிறுத்துவதற்காக நாட்டின் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்போம்.தற்போது நாட்டின் சுற்றுச்சூழலையும் இந்த அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. குரங்குடன் நிறுத்தமாட்டார்கள். யானைகளையும் விற்பனை செய்வார்கள். நாட்டை இந்த நிலமைக்கு கொண்டு சென்று ஊழல்வாதிகள் எவ்வித இலக்கும் திட்டமும் இல்லாமல் விடயங்களையே முன்னெடுக்கின்றனர். இதனை இவர்கள் நிறுத்த வேண்டும்.குரங்குகளை விற்று அன்றைய நாளை மாத்திரம் சமாளிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. பின்னர் பாம்புகளை விற்பனை செய்வார்கள். யானைகளையும் விற்பனை செய்வார்கள். இதுவே இவர்களின் திட்டம். இது என்ன இலக்கு என்றார்.

Advertisement

Advertisement

Advertisement