2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள 10,000 வீடுகளில் 1,300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதேவேளை 4,350 வீடுகள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் 4,350 வீடுகள் கட்டப்பட்டு, அந்த வீடுகள் வழங்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையைப் பொறுத்தவரை, அது தேசிய அளவில் 83.75 சதவீதமாகவும், தோட்டங்களில் 5.6 சதவீதமாகவும் உள்ளது, இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
தேசிய வறுமை விகிதம் 11.9 சதவீதமாக இருந்தாலும், தோட்டங்களில் வறுமை விகிதம் 29.7 சதவீதமாக உள்ளது.
பெருந்தோட்ட மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதன் மூலம் வீட்டுவசதி பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம்.
அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியான தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
2025ம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் 2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள 10,000 வீடுகளில் 1,300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதேவேளை 4,350 வீடுகள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் 4,350 வீடுகள் கட்டப்பட்டு, அந்த வீடுகள் வழங்கப்படும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையைப் பொறுத்தவரை, அது தேசிய அளவில் 83.75 சதவீதமாகவும், தோட்டங்களில் 5.6 சதவீதமாகவும் உள்ளது, இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.தேசிய வறுமை விகிதம் 11.9 சதவீதமாக இருந்தாலும், தோட்டங்களில் வறுமை விகிதம் 29.7 சதவீதமாக உள்ளது.பெருந்தோட்ட மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதன் மூலம் வீட்டுவசதி பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம்.அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியான தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.