இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ் பொதுமக்களைச் சந்தித்தார்.
அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரசர் மீது முட்டை வீச்சு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ் பொதுமக்களைச் சந்தித்தார்.அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.