• May 13 2024

பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ள திருமலை விவசாயிகள்!

Sharmi / Feb 11th 2023, 2:05 pm
image

Advertisement

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை காரணமாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெட்டு கூலி ,டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல இன்னல்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா சூரங்கல் ,கற்குழி பகுதியில் தற்போது இயந்திரம் மூலமான அறுவடை இடம் பெறுகின்றது.

போதுமான உரமானியம் கிடைக்காமை போன்ற பல குறைபாடுகளால் இம் முறை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சலின்மை பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கரிசனை காட்டி தங்களுக்கு உதவுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ள திருமலை விவசாயிகள் திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை காரணமாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வெட்டு கூலி ,டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல இன்னல்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.கிண்ணியா சூரங்கல் ,கற்குழி பகுதியில் தற்போது இயந்திரம் மூலமான அறுவடை இடம் பெறுகின்றது. போதுமான உரமானியம் கிடைக்காமை போன்ற பல குறைபாடுகளால் இம் முறை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சலின்மை பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கரிசனை காட்டி தங்களுக்கு உதவுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement