கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைமை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ், வாடிகன் தேவாலயத்தில் தனது முதல் திருப்பலியை இன்று தொடங்கி வைத்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானார். இதுவரை இருந்த போப் மதகுருக்களிலேயே மிகுந்த முற்போக்கு சிந்தனைக் கொண்டவராகவும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவராகவும் போப் பிரான்சிஸ் விளங்கினார்.
இதனால் அவரது மறைவானது, அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக, புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் வாடிகன் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
அதன்படி, ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது.
இதையடுத்து, புதிய போப் '14ஆம் லியோ' என்ற பெயரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. போப் ஆக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், வாடிகன் திருச்சபை தலைமை குருவாக பொறுப்பேற்ற 14ஆம் போப் லியோ, நேற்று தனது முதல் திருப்பலியை நடத்தினார். இந்த திருப்பலியில் வாடிகன், ரோம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மறைந்த போப் பிரான்சிஸ் அணியும் சிகப்பு நிறத்திலான அங்கி சால்வையை அவர் அணிந்திருந்தார். போப் பிரான்சிஸ் பின்பற்றிய சில முற்போக்கு நடைமுறைகளை தானும் கடைப்பிடிப்பேன் என அவர் மறைமுகமாக உணர்த்துவதற்காக அந்த சால்வையை அணிந்ததாக கத்தோலிக்க மக்கள் கருதினர்.
திருப்பலியை தொடங்கி வைத்து பேசிய 14ஆம் போப் லியோ, "ஒரு தேவாலயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் அடையாளம் காண்பது அவசியம். மக்களுக்கும், கர்த்தருக்கும் பாலமாக கிறிஸ்தவ தேவாலயம் விளங்க வேண்டும்.
உதவி, அன்பு, ஆறுதலான வார்த்தை என எது தேவைப்பட்டாலும், அதனை எளிதாக எடுத்துக் கொள்ளும் இடமாக ஒரு தேவாலயம் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
தனது முதலாவது திருப்பலியை இன்று ஒப்புக்கொடுத்த திருத்தந்தை 14ம் லியோ கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைமை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ், வாடிகன் தேவாலயத்தில் தனது முதல் திருப்பலியை இன்று தொடங்கி வைத்தார்.உடல்நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானார். இதுவரை இருந்த போப் மதகுருக்களிலேயே மிகுந்த முற்போக்கு சிந்தனைக் கொண்டவராகவும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவராகவும் போப் பிரான்சிஸ் விளங்கினார்.இதனால் அவரது மறைவானது, அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக, புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் வாடிகன் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.அதன்படி, ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது. இதையடுத்து, புதிய போப் '14ஆம் லியோ' என்ற பெயரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. போப் ஆக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.இந்நிலையில், வாடிகன் திருச்சபை தலைமை குருவாக பொறுப்பேற்ற 14ஆம் போப் லியோ, நேற்று தனது முதல் திருப்பலியை நடத்தினார். இந்த திருப்பலியில் வாடிகன், ரோம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, மறைந்த போப் பிரான்சிஸ் அணியும் சிகப்பு நிறத்திலான அங்கி சால்வையை அவர் அணிந்திருந்தார். போப் பிரான்சிஸ் பின்பற்றிய சில முற்போக்கு நடைமுறைகளை தானும் கடைப்பிடிப்பேன் என அவர் மறைமுகமாக உணர்த்துவதற்காக அந்த சால்வையை அணிந்ததாக கத்தோலிக்க மக்கள் கருதினர்.திருப்பலியை தொடங்கி வைத்து பேசிய 14ஆம் போப் லியோ, "ஒரு தேவாலயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் அடையாளம் காண்பது அவசியம். மக்களுக்கும், கர்த்தருக்கும் பாலமாக கிறிஸ்தவ தேவாலயம் விளங்க வேண்டும். உதவி, அன்பு, ஆறுதலான வார்த்தை என எது தேவைப்பட்டாலும், அதனை எளிதாக எடுத்துக் கொள்ளும் இடமாக ஒரு தேவாலயம் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.