• Nov 23 2024

நவம்பரில் முதல் 17 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Chithra / Nov 21st 2024, 3:38 pm
image


இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 23,660 ஆகும்.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 16,602 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,776 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,611 சுற்றுலாப் பயணிகளும்,  அவுஸ்திரேலியாவிலிருந்து 4,052 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,724,030 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பரில் முதல் 17 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 23,660 ஆகும்.அதன்படி, ரஷ்யாவிலிருந்து 16,602 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,776 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,611 சுற்றுலாப் பயணிகளும்,  அவுஸ்திரேலியாவிலிருந்து 4,052 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,724,030 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement