• May 21 2024

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா..!samugammedia

Sharmi / May 29th 2023, 1:52 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்றையதினம் (29) பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது சிறு முயற்சியாளர்களின் பாரம்பரிய உணவுகளான தோசை, அப்பம், ஒடியல் கூழ், குரக்கன் பிட்டு, பலகார வகைகள், பழங்கள், இளநீர், தானிய உணவுகள், நுங்கு, பழச்சாறுகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.

சிறு முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல், அவர்களது உற்பத்திகளை விளம்பரப்படுத்தல், நவீன யுகத்தில் இளைஞர் யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள விரைவு உணவு பழக்க வழக்கங்களை மாற்றி பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நோய் நொடிகளில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல நல்லெண்ண நோக்கில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.

காலை 9.00 மணியளவில், பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களது தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலர் செல்வகுமாரி நேசகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா.samugammedia யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்றையதினம் (29) பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதன்போது சிறு முயற்சியாளர்களின் பாரம்பரிய உணவுகளான தோசை, அப்பம், ஒடியல் கூழ், குரக்கன் பிட்டு, பலகார வகைகள், பழங்கள், இளநீர், தானிய உணவுகள், நுங்கு, பழச்சாறுகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.சிறு முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல், அவர்களது உற்பத்திகளை விளம்பரப்படுத்தல், நவீன யுகத்தில் இளைஞர் யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள விரைவு உணவு பழக்க வழக்கங்களை மாற்றி பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நோய் நொடிகளில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல நல்லெண்ண நோக்கில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.காலை 9.00 மணியளவில், பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களது தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலர் செல்வகுமாரி நேசகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement