• Apr 28 2024

யாழில் சோகம்...! மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமசேவகர் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Nov 14th 2023, 8:05 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த  48வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளைக் காய்ச்சலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

யாழில் சோகம். மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமசேவகர் உயிரிழப்பு.samugammedia யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த  48வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மூளைக் காய்ச்சலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement