• Mar 01 2025

சீரற்ற காலநிலையால் தொடருந்து சேவைகள் பாதிப்பு

Chithra / Mar 1st 2025, 9:19 am
image

 

மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.  

இதன்படி, பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில பகுதிகளில் நிலவும் தொடர் மழைவீழ்ச்சி காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நேற்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் இன்று (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

சீரற்ற காலநிலையால் தொடருந்து சேவைகள் பாதிப்பு  மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.  இதன்படி, பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் சில பகுதிகளில் நிலவும் தொடர் மழைவீழ்ச்சி காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நேற்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் இன்று (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement