• Jan 19 2025

திருகோணமலை மாவட்ட செயலக ஊழியர்கள் : 'க்ளீன் ஸ்ரீ லங்கா'உறுதி மொழியுடன் பணிகள் ஆரம்பம்

Tharmini / Jan 1st 2025, 1:30 pm
image

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு, பதில் அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வானது பதில் அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் "க்ளீன் ஸ்ரீ லங்கா" என்ற திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

ஜனாதிபதி  தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"க்ளீன் ஸ்ரீ லங்கா' என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். 

இதன்போது, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.





திருகோணமலை மாவட்ட செயலக ஊழியர்கள் : 'க்ளீன் ஸ்ரீ லங்கா'உறுதி மொழியுடன் பணிகள் ஆரம்பம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு, பதில் அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.2025 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வானது பதில் அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் "க்ளீன் ஸ்ரீ லங்கா" என்ற திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.ஜனாதிபதி  தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது."க்ளீன் ஸ்ரீ லங்கா' என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இதன்போது, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement