• Feb 27 2025

வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தெங்கு பயிரிடும் செயற்றிட்டம் திருகோணமலைக்கும் வேண்டும். இம்ரான் மஹரூப் எம்.பி கோரிக்கை

Thansita / Feb 26th 2025, 7:49 pm
image

வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தெங்கு பயிரிடும் செயற்திட்டத்தை திருகோணமலையிலும் முன்னெடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேட்டுக்கொண்டார்.

இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி பிரேரனையா முன்வைத்தார்.  

குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திரா தலைமையில் இடம்பெற்றது.

இதில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 

கிண்ணியா கரையோரங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், 

பெரிய கிண்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொமின் டவரை அங்கிருந்து அகற்றி மக்கள் செறிவு குறைந்த இடத்துக்கு மாற்றி அந்த இடத்தை கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு  கையளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புபடைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தெங்கு பயிரிடும் செயற்றிட்டம் திருகோணமலைக்கும் வேண்டும். இம்ரான் மஹரூப் எம்.பி கோரிக்கை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள தெங்கு பயிரிடும் செயற்திட்டத்தை திருகோணமலையிலும் முன்னெடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேட்டுக்கொண்டார்.இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி பிரேரனையா முன்வைத்தார்.  குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திரா தலைமையில் இடம்பெற்றது.இதில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா கரையோரங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பெரிய கிண்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொமின் டவரை அங்கிருந்து அகற்றி மக்கள் செறிவு குறைந்த இடத்துக்கு மாற்றி அந்த இடத்தை கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு  கையளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புபடைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement