• May 02 2024

12 மாவட்டங்களுக்கு சிக்கல் - வெப்பமான காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! samugammedia

Chithra / Aug 21st 2023, 5:45 pm
image

Advertisement

 நாட்டின் சில பிரதேசங்களுக்கான வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பமானது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இதன் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை ஒக்டோபர் மாதம் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அவர் கூறினார்.

இம்மாத இறுதியில் நாட்டின் காலநிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 மாவட்டங்களுக்கு சிக்கல் - வெப்பமான காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை samugammedia  நாட்டின் சில பிரதேசங்களுக்கான வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.மனித உடலால் உணரப்படும் வெப்பமானது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இதன் மூலம் தெரிவித்துள்ளது.இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை ஒக்டோபர் மாதம் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அவர் கூறினார்.இம்மாத இறுதியில் நாட்டின் காலநிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement