• Sep 17 2024

மாளிகைக்காட்டில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்!

Sharmi / Dec 26th 2022, 10:17 am
image

Advertisement

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள்  கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 18 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். இம்தியாஸ் இந் தலைமையில் இரண்டாவது முறையாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் சுனாமி நினைவுரையை மௌலவி எம்.ஜவாத் ரஸா பிர்தௌஸ் (அல் ஹாபிழ்) நிகழ்த்தினார். மத்ரஸதுல் இர்ஸாதியா அதிபர் அப்துல் கரீம் (அல் ஹாபிழ்) துஆ பிராத்தனை செய்தார். மேலும்  அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ், மௌலவி எம்.ஏ.எம்.ரியாஸத் உட்பட உலமாக்கள், இர்ஷாதியா குரான் மதரஸா மாணவர்கள் ஆகியோரும் குரான் ஓதி தமாம் செய்தனர்.

இந்நிகழ்வில் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், குரான் மதரஸா நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா. ஏற்பாடு செய்த நினைவுதின நிகழ்வுகள் சாய்ந்தருதில் அமைப்பின் தவிசாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் நினைவுரையும் இடம்பெற்றது.

சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வு அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு அந் நூர் ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலில் சுனாமி தினமான இன்று (26) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாஸீன் ஓதுதல், பயான் நிகழ்ச்சி, துஆப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. ஏ.நஜீம், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மாளிகைக்காட்டில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள் உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள்  கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 18 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறது.அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். இம்தியாஸ் இந் தலைமையில் இரண்டாவது முறையாகவும் நடைபெற்றது.இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் சுனாமி நினைவுரையை மௌலவி எம்.ஜவாத் ரஸா பிர்தௌஸ் (அல் ஹாபிழ்) நிகழ்த்தினார். மத்ரஸதுல் இர்ஸாதியா அதிபர் அப்துல் கரீம் (அல் ஹாபிழ்) துஆ பிராத்தனை செய்தார். மேலும்  அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ், மௌலவி எம்.ஏ.எம்.ரியாஸத் உட்பட உலமாக்கள், இர்ஷாதியா குரான் மதரஸா மாணவர்கள் ஆகியோரும் குரான் ஓதி தமாம் செய்தனர்.இந்நிகழ்வில் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், குரான் மதரஸா நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா. ஏற்பாடு செய்த நினைவுதின நிகழ்வுகள் சாய்ந்தருதில் அமைப்பின் தவிசாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் நினைவுரையும் இடம்பெற்றது.சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வு அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு அந் நூர் ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலில் சுனாமி தினமான இன்று (26) இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாஸீன் ஓதுதல், பயான் நிகழ்ச்சி, துஆப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. ஏ.நஜீம், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement