வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று (24.03) இடம்பெற்றது.
வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் வைத்தியசாலை பின் வீதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் 'ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்' எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினமான மார்ச் 24 விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றதுடன், அங்கிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகியது.
வைத்தியசாலை பின் வீதியில் ஆரம்பமாகிய விழிப்புணர்வு ஊர்வலம் கண்டி வீதிக்கு சென்று அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கத்தை அடைந்து மன்னார் வீதி ஊடாக குருமன்காடு சந்தியை அடைந்து, புகையிரத வீதி ஊடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து வைத்தியசாலையை சென்றடைந்தது.
இதில் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள் ஆகியோருடன் முச்சக்கர வண்டிகளும் விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக வலம் வந்திதுருந்தன
வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று (24.03) இடம்பெற்றது.வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் வைத்தியசாலை பின் வீதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் 'ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்' எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினமான மார்ச் 24 விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றதுடன், அங்கிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகியது.வைத்தியசாலை பின் வீதியில் ஆரம்பமாகிய விழிப்புணர்வு ஊர்வலம் கண்டி வீதிக்கு சென்று அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கத்தை அடைந்து மன்னார் வீதி ஊடாக குருமன்காடு சந்தியை அடைந்து, புகையிரத வீதி ஊடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து வைத்தியசாலையை சென்றடைந்தது.இதில் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள் ஆகியோருடன் முச்சக்கர வண்டிகளும் விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக வலம் வந்திதுருந்தன