• Apr 30 2024

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பில் வங்களாதேசத்தில் இருவர் கைது...!

Sharmi / Apr 12th 2024, 1:06 pm
image

Advertisement

கடந்த மாா்ச் 1-ஆம் திகதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடத்தப்பட்டுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைதாகியுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது  10 போ் காயமடைந்தனா்.

முன்னதாக பெல்லாரியில் இருந்து ஹைதராபாத்துக்கு தப்பிக்க முக்கிய குற்றவாளிக்கு உதவியாக பெல்லாரியைச் சோ்ந்த ஷப்பீா் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாா்ச் 13ஆம் தேதி தடுப்புக் காவலில் விசாரித்துள்ளனர். 

அதன் அடிப்படையில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், உத்தர பிரதேசத்தின் ஒரு இடம், தமிழகத்தின் 5 இடங்கள், கா்நாடகத்தின் 12 இடங்களில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்ட போது அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதன்போது பிரதான குற்றவாளிகளான முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாக என்ஐஏ தெரிவித்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் இன்று(12) கைது  செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பில் வங்களாதேசத்தில் இருவர் கைது. கடந்த மாா்ச் 1-ஆம் திகதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடத்தப்பட்டுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைதாகியுள்ளனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது  10 போ் காயமடைந்தனா்.முன்னதாக பெல்லாரியில் இருந்து ஹைதராபாத்துக்கு தப்பிக்க முக்கிய குற்றவாளிக்கு உதவியாக பெல்லாரியைச் சோ்ந்த ஷப்பீா் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாா்ச் 13ஆம் தேதி தடுப்புக் காவலில் விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், உத்தர பிரதேசத்தின் ஒரு இடம், தமிழகத்தின் 5 இடங்கள், கா்நாடகத்தின் 12 இடங்களில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்ட போது அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.இதன்போது பிரதான குற்றவாளிகளான முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாக என்ஐஏ தெரிவித்தனர்.இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் இன்று(12) கைது  செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement