டுபாயிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து தங்கச்சங்கிலி , 05 தங்க வளையல்கள் மற்றும் 10 மோதிரங்களும்,
மற்றைய நபரிடமிருந்து தங்கச்சங்கிலி, தங்க வளையல்கள் மற்றும் 07 மோதிரங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து வந்த இருவர் தங்க நகைகளுடன் கட்டுநாயக்கவில் கைது டுபாயிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து தங்கச்சங்கிலி , 05 தங்க வளையல்கள் மற்றும் 10 மோதிரங்களும்,மற்றைய நபரிடமிருந்து தங்கச்சங்கிலி, தங்க வளையல்கள் மற்றும் 07 மோதிரங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.