• Jan 24 2025

ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி

Tharmini / Jan 23rd 2025, 3:32 pm
image

ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை கைதான சந்தேக நபர் இலக்குவைத்ததாகவும்  சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த நபர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் என மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் புகையிரதபாதையூடாக தப்பியோட முயன்றதை தொடர்ந்து அந்த பகுதியின் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன, பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் குடிவரவு கொள்கை குறித்து கடும் விவாதங்கள் ஜேர்மனியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அத்துடன் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை கைதான சந்தேக நபர் இலக்குவைத்ததாகவும்  சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் எனவும் கூறப்படுகின்றது.அதேவேளை குறித்த நபர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் என மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.சந்தேகநபர் புகையிரதபாதையூடாக தப்பியோட முயன்றதை தொடர்ந்து அந்த பகுதியின் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன, பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜேர்மனியின் குடிவரவு கொள்கை குறித்து கடும் விவாதங்கள் ஜேர்மனியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement