• Oct 30 2024

நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்..! samugammedia

Chithra / Apr 30th 2023, 3:58 pm
image

Advertisement

கொழும்பு நகரில் நீண்டகாலமாக  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின்  பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்,

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 20சோடியும் மீட்கப்பட்டுள்ளதாகவெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர் என  தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக  திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில்  வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில்   ஈடுபட்டு   வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்  சுபாஸ் காந்தவலவின் பணிப்பில்  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவின்  பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதர் கேசாந்  தலைமையிலான  அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர். samugammedia கொழும்பு நகரில் நீண்டகாலமாக  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின்  பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 20சோடியும் மீட்கப்பட்டுள்ளதாகவெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மேலும் திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர் என  தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக  திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில்  வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில்   ஈடுபட்டு   வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்  சுபாஸ் காந்தவலவின் பணிப்பில்  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவின்  பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதர் கேசாந்  தலைமையிலான  அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement