• May 26 2025

சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா!

Chithra / May 25th 2025, 12:27 pm
image

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால தெரிவித்துள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர்   ராஜினாமா கடிதங்களை நேற்று  அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.  

சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.  அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர்   ராஜினாமா கடிதங்களை நேற்று  அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement