• May 02 2024

இலங்கை மக்களிடையே பரவிவரும் இரண்டு புதிய நோய்கள்! - வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 2nd 2023, 11:32 am
image

Advertisement

இலங்கை மக்களிடையே இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து நோய் அறிகுறி தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல் நிலை குறித்து பெற்றோர்கள் அவதானம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 


இதேவேளை, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் முகமூடி அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நோயுடன் கண்களில் இருந்து நீர் வெளியேறினால் அது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிடையே பரவிவரும் இரண்டு புதிய நோய்கள் - வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia இலங்கை மக்களிடையே இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து நோய் அறிகுறி தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல் நிலை குறித்து பெற்றோர்கள் அவதானம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதேவேளை, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் முகமூடி அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த நோயுடன் கண்களில் இருந்து நீர் வெளியேறினால் அது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement