• May 10 2024

ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஏலக்காய் மூடைகளுடன் இருவர் சிக்கினர்!

Chithra / Jan 16th 2023, 6:54 pm
image

Advertisement

கற்பிட்டி ஏத்தாலைப் பகுதியில் ஏலக்காய் மூடைகளுடன் இருவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து வீடொன்றில் மேற்கொள்ளபட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு கப்ரக வண்டிகளில் தேங்காய்களுக்குள் ஏலக்காய் மூடைகளை சூட்சுமமான முறையில் மரைத்து வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

1330 கிலோ கிராம் எடைகளுடைய ஏலக்காய் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 41 வயதுடைய ஏத்தாலை மற்றும் 33 வதுடைய புழுதிவாயல் ஆகிய பிரதேசத்திலுள்ள இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த ஏலக்காய் மூடைகள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாக விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூடைகள் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூடைகளையும், இரண்டு கெப் லொறிகளையும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஏலக்காய் மூடைகளுடன் இருவர் சிக்கினர் கற்பிட்டி ஏத்தாலைப் பகுதியில் ஏலக்காய் மூடைகளுடன் இருவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து வீடொன்றில் மேற்கொள்ளபட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு கப்ரக வண்டிகளில் தேங்காய்களுக்குள் ஏலக்காய் மூடைகளை சூட்சுமமான முறையில் மரைத்து வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1330 கிலோ கிராம் எடைகளுடைய ஏலக்காய் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 41 வயதுடைய ஏத்தாலை மற்றும் 33 வதுடைய புழுதிவாயல் ஆகிய பிரதேசத்திலுள்ள இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஏலக்காய் மூடைகள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாக விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூடைகள் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூடைகளையும், இரண்டு கெப் லொறிகளையும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement