• Apr 27 2024

ஹெலிகப்டரிலிருந்து தரையிறங்கி கையை கையில் எடுத்தது சுதந்திரக் கட்சி!

Chithra / Jan 16th 2023, 6:32 pm
image

Advertisement

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக ‘கை’ சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கீழ் ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மஹரகம தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் புத்தளம், அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஹெலிகொப்டர் சின்னத்தின் கீழ் கூட்டணியாக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவானது அத கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இன்று (ஜன.16) செலுத்தப்பட்டது.

காலி மாவட்டத்திற்கான கட்டுப் பண வைப்பு நாளை (ஜன.17) செலுத்தப்படும் ஏஐஎன குணசிங்க குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுதந்திர மக்கள் கூட்டமைப்பை கடந்த 11ஆம் திகதி ஆரம்பித்திருந்தன.

எவ்வாறாயினும், வேட்புமனுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு தனித்து போட்டியிட தீர்மானித்ததாக திசர குணசிங்க தெரிவித்தார்.

புதிய கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (ஜன.16) பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தீர்மானத்தை கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கவுள்ளது

ஹெலிகப்டரிலிருந்து தரையிறங்கி கையை கையில் எடுத்தது சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக ‘கை’ சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கீழ் ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மஹரகம தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் புத்தளம், அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஹெலிகொப்டர் சின்னத்தின் கீழ் கூட்டணியாக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவானது அத கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இன்று (ஜன.16) செலுத்தப்பட்டது.காலி மாவட்டத்திற்கான கட்டுப் பண வைப்பு நாளை (ஜன.17) செலுத்தப்படும் ஏஐஎன குணசிங்க குறிப்பிட்டார்.ஆளும் கட்சியில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுதந்திர மக்கள் கூட்டமைப்பை கடந்த 11ஆம் திகதி ஆரம்பித்திருந்தன.எவ்வாறாயினும், வேட்புமனுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு தனித்து போட்டியிட தீர்மானித்ததாக திசர குணசிங்க தெரிவித்தார்.புதிய கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (ஜன.16) பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தீர்மானத்தை கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கவுள்ளது

Advertisement

Advertisement

Advertisement