• May 21 2024

இலங்கையின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் வசம்?

Chithra / Dec 3rd 2022, 12:56 pm
image

Advertisement

இலங்கையின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தை நீன நிறுவனத்திற்கும் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனம் ஒன்றுக்கும் வழங்குவதற்காக இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்யும் விலை மற்றும் அரசாங்கம் நுகர்வோருக்கு வழங்கும் விலை தொடர்பாக தீர்மானிப்பதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.


லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் தீர்மானத்திற்கு அமைய மின் உற்பத்தி நிலையங்களை  கொள்வனவு செய்ய எதிர்பாரத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. 


இலங்கையின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் இலங்கையின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தை நீன நிறுவனத்திற்கும் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனம் ஒன்றுக்கும் வழங்குவதற்காக இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன் பின்னர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்யும் விலை மற்றும் அரசாங்கம் நுகர்வோருக்கு வழங்கும் விலை தொடர்பாக தீர்மானிப்பதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் தீர்மானத்திற்கு அமைய மின் உற்பத்தி நிலையங்களை  கொள்வனவு செய்ய எதிர்பாரத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement