• Apr 06 2025

24 நாட்களாக இரு பாடசாலை மாணவிகள் மாயம் !Samugammedia

Tamil nila / Dec 24th 2023, 10:53 pm
image

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக காணாமல்போயுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நண்பர்கள் என்பதுடன்,பகுதிநேர வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போயுள்ள இருவரையும் தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



24 நாட்களாக இரு பாடசாலை மாணவிகள் மாயம் Samugammedia குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக காணாமல்போயுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இருவரும் நண்பர்கள் என்பதுடன்,பகுதிநேர வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல்போயுள்ள இருவரையும் தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement