• Jan 18 2025

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இரு மாணவர்கள் பலி

Chithra / Jan 17th 2025, 7:15 am
image


அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் கலடிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களான ஜெயக்கொடி ஆராச்சிலகே மிலிந்த சம்பத் மற்றும் ஜெயநந்தன புஷ்பகுமாரகே கவிது மதுஷான் ரத்நாயக்க ஆவர்.  

மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த இரண்டு மாணவர்களும் மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காலதிவுல்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இரு மாணவர்கள் பலி அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்கள் கலடிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களான ஜெயக்கொடி ஆராச்சிலகே மிலிந்த சம்பத் மற்றும் ஜெயநந்தன புஷ்பகுமாரகே கவிது மதுஷான் ரத்நாயக்க ஆவர்.  மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.குறித்த இரண்டு மாணவர்களும் மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை காலதிவுல்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement