• May 03 2024

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 6:32 pm
image

Advertisement

இஸ்ரேல், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா தலைவர் வோல்கர் டர்க் கவலை தெரிவித்துள்ளார். 


இது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சுழற்சி குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.


நாப்லஸில் இஸ்ரேலிய நடவடிக்கை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களால் சிறுவன் ஒருவர் உட்பட மூன்று முதியவர்கள் மற்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டார்.


இந்நிலையில், சட்ட அமலாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 


அனைத்து கொலைகள் மற்றும் கடுமையான காயங்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின் கீழ் விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை SamugamMedia இஸ்ரேல், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா தலைவர் வோல்கர் டர்க் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சுழற்சி குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.நாப்லஸில் இஸ்ரேலிய நடவடிக்கை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களால் சிறுவன் ஒருவர் உட்பட மூன்று முதியவர்கள் மற்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டார்.இந்நிலையில், சட்ட அமலாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து கொலைகள் மற்றும் கடுமையான காயங்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின் கீழ் விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement