• May 13 2024

பயங்கரவாத எதிர்ப்பு, புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் samugammedia

Chithra / May 9th 2023, 2:52 pm
image

Advertisement

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாதிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாதம் பற்றிய வரையறைகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க இதனை உறுதி செயய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், தடை செய்வதற்கும், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து புனர்வாழ்வு சட்டமூலத்தின் திருத்தங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சில விடயங்களை கடைப்பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை புனர்வாழ்வு சட்டமூலத்தின் பல விதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடமைகளுடன் நேரடியாக முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் samugammedia இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாதிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.பயங்கரவாதம் பற்றிய வரையறைகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க இதனை உறுதி செயய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், தடை செய்வதற்கும், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து புனர்வாழ்வு சட்டமூலத்தின் திருத்தங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சில விடயங்களை கடைப்பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை புனர்வாழ்வு சட்டமூலத்தின் பல விதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடமைகளுடன் நேரடியாக முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement