• Jul 27 2024

எதற்காக இந்த முள்ளிவாய்கால் கஞ்சி - யாழில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல்.! samugammedia

Sharmi / May 9th 2023, 3:18 pm
image

Advertisement

யாழ்ப்பாணம், காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக கல்லூரியின் மாணவர்களினை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இன்று 1.30மணியளவில் இடம்பெற்றது. வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழினத்தின் வலிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் இளம் தலைமுறையான பாடசாலை மாணவர்களுக்கு எதற்காக கஞ்சி வழங்கப்படுகின்றது எனபதை எடுத்தியம்பும் துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டிருந்தது.

இதனை பாடசாலை மாணவி வாசிக்கும் காட்சிகளையும் இதன்போது அவதானிக்க முடிந்தது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான வரலாறும் மாணவர்களுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு இனப்படுகொலையின் நினைவுப்பொருள். முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது சுவையற்றது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் செற்பதம் அல்ல. அது ஒர் அரசியல் சொற்பதம்.....சுவையற்ற முள்ளிவாய்கால் கஞ்சியை பருகும் போது ஒரு இனத்தை இல்லாமல் செய்த சிங்கள தேசத்தின் கொடூரமும் தமிழினத்தின் தொண்டையை இறுக்கும்  வலியின் தாக்கத்தையும் உணரச்செய்வதற்காகவே இதனை ஒரு மரபாக தமிழ் மக்கள் மாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






எதற்காக இந்த முள்ளிவாய்கால் கஞ்சி - யாழில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல். samugammedia யாழ்ப்பாணம், காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக கல்லூரியின் மாணவர்களினை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இன்று 1.30மணியளவில் இடம்பெற்றது. வழங்கப்பட்டிருந்தது.குறிப்பாக தமிழினத்தின் வலிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் இளம் தலைமுறையான பாடசாலை மாணவர்களுக்கு எதற்காக கஞ்சி வழங்கப்படுகின்றது எனபதை எடுத்தியம்பும் துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டிருந்தது.இதனை பாடசாலை மாணவி வாசிக்கும் காட்சிகளையும் இதன்போது அவதானிக்க முடிந்தது.முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான வரலாறும் மாணவர்களுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு இனப்படுகொலையின் நினைவுப்பொருள். முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது சுவையற்றது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் செற்பதம் அல்ல. அது ஒர் அரசியல் சொற்பதம்.சுவையற்ற முள்ளிவாய்கால் கஞ்சியை பருகும் போது ஒரு இனத்தை இல்லாமல் செய்த சிங்கள தேசத்தின் கொடூரமும் தமிழினத்தின் தொண்டையை இறுக்கும்  வலியின் தாக்கத்தையும் உணரச்செய்வதற்காகவே இதனை ஒரு மரபாக தமிழ் மக்கள் மாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement