• Oct 01 2024

ஊடகங்களை ஒடுக்க முயற்சி: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு ! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 9:55 pm
image

Advertisement

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகங்களை ஒடுக்க முயற்சிக்கப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 21 ஆம் திருத்தத்தில் நாங்கள் வெற்றியை பெற்றுள்ளோம். அதனூடாக பெற்ற வெற்றியின் ஊடாக நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நிறுவனங்களின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.


உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களை, அவர்கள் வழங்கிய தீர்ப்பொன்று தொடர்பில் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முயற்சிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை ஒடுக்க முயற்சி: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு SamugamMedia நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகங்களை ஒடுக்க முயற்சிக்கப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 21 ஆம் திருத்தத்தில் நாங்கள் வெற்றியை பெற்றுள்ளோம். அதனூடாக பெற்ற வெற்றியின் ஊடாக நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நிறுவனங்களின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களை, அவர்கள் வழங்கிய தீர்ப்பொன்று தொடர்பில் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முயற்சிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement