• Sep 25 2024

சஜித் அணிக்கு ஐ.தே.க. அழைப்பு - ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை என சஜித் அறிவிப்பு

Anaath / Sep 24th 2024, 6:21 pm
image

Advertisement

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இந்தப் பொதுக் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும், தனது கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

சஜித் அணிக்கு ஐ.தே.க. அழைப்பு - ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை என சஜித் அறிவிப்பு எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்தச் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.இதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இந்தப் பொதுக் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும், தனது கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement