• May 04 2024

தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம்...! 20 அடிக்கு மேல் எழும் கடல் அலைகள்...! மக்கள் அச்சம்..!

Sharmi / Apr 2nd 2024, 4:30 pm
image

Advertisement

தனுஸ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம்  காணப்படுவதுடன் 20 அடிக்கு மேல் எழும் கடல் அலைகளால்  மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வரலாறு காணாத கடல் நீரானது சீற்றத்துடன் காணப்படுவதுடன் கடல் அலைகள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்ரோசத்துடன் எழுந்து வீசி வருகின்றது,.

இதனால் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி கடல் நீரானது தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துள்ளது மட்டுமல்லாது சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் தேங்கி கிடப்பதனால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை இயக்க முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர். 

மேலும் கடல் நீரானது தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை மீனவர்கள் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் சூழ்ந்து இருப்பதினால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருவதோடு கடந்த 1964 புயலை மீண்டும் இந்த கடல் அலையானது ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு மீனவர்களும் இருந்து வருகின்றனர்.

தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம். 20 அடிக்கு மேல் எழும் கடல் அலைகள். மக்கள் அச்சம். தனுஸ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம்  காணப்படுவதுடன் 20 அடிக்கு மேல் எழும் கடல் அலைகளால்  மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து சென்று வருகின்றனர்.இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வரலாறு காணாத கடல் நீரானது சீற்றத்துடன் காணப்படுவதுடன் கடல் அலைகள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்ரோசத்துடன் எழுந்து வீசி வருகின்றது,.இதனால் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி கடல் நீரானது தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துள்ளது மட்டுமல்லாது சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் தேங்கி கிடப்பதனால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை இயக்க முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர். மேலும் கடல் நீரானது தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை மீனவர்கள் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் சூழ்ந்து இருப்பதினால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருவதோடு கடந்த 1964 புயலை மீண்டும் இந்த கடல் அலையானது ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு மீனவர்களும் இருந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement