• May 03 2024

நியாயமற்ற கட்டணம்..!ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் முறைப்பாடு...! காதணியை விற்கும் பெற்றோர்.!samugammedia

Sharmi / Jun 14th 2023, 10:32 am
image

Advertisement

இலங்கையில் உயர்தர, விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபா தொடக்கம்  4 ஆயிரம் ரூபாவரை பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாதாந்தக் கட்டணம் தவிர, சேர்க்கைக் கட்டணமும் தனித்தனியாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் ஆசிரியர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எனவே தனியார் வகுப்புகளில் வசூலிக்கப்படுகின்ற கட்டணம் குறித்து அரசு சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் நிலையங்களை பராமரிப்பதற்கு அதிகளவான பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அதன் காரணமாகவே மாணவர்களிடமிருந்து அதிகளவான பணத்தினை பெறவேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலைமையால் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு தமது காதணிகளை அடமானம் வைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தவறியவர்களில், நாடு முழுவதிலும் அதிகளவான கல்வி ஆசிரியர்கள் இருப்பதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நியாயமற்ற கட்டணம்.ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் முறைப்பாடு. காதணியை விற்கும் பெற்றோர்.samugammedia இலங்கையில் உயர்தர, விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர்.குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபா தொடக்கம்  4 ஆயிரம் ரூபாவரை பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மாதாந்தக் கட்டணம் தவிர, சேர்க்கைக் கட்டணமும் தனித்தனியாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் ஆசிரியர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.எனவே தனியார் வகுப்புகளில் வசூலிக்கப்படுகின்ற கட்டணம் குறித்து அரசு சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தனியார் நிலையங்களை பராமரிப்பதற்கு அதிகளவான பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அதன் காரணமாகவே மாணவர்களிடமிருந்து அதிகளவான பணத்தினை பெறவேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்நிலைமையால் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு தமது காதணிகளை அடமானம் வைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தவறியவர்களில், நாடு முழுவதிலும் அதிகளவான கல்வி ஆசிரியர்கள் இருப்பதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement